இராணுவ சிறப்பம்சம்
சான்றிதழ் வழங்கும் விழாவில் 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 31 ஒக்டோபர் 2024 அன்று கட்டுகஸ்தோட்டை ஸ்ரீ சந்தானந்த பௌத்த ஆண்கள்/பெண்கள் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநருக்கு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அழைப்பு

வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் 02 நவம்பர் 2024 அன்று இராணுவத்தின் தற்போதைய சமூக செயற்திட்டங்கள் மற்றும் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றிய தகவல்களைப் பெறும் நோக்கத்துடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார்.
யாழ். வழங்கல் கட்டளை தளபதி பலாலி இராணுவ தள வைத்தியசாலைக்கு விஜயம்

யாழ்.பாதுகாப்பு படை தலைமையக வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எல்.எஸ்.டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 நவம்பர் 02 ஆம் திகதி பலாலி இராணுவத் தள மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 563 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளை படையலகுகளுக்கு விஜயம்

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 563 வது காலாட் பிரிகேட், 3 வது விசேட படையணி பயிற்சி பாடசாலை மற்றும் 7 வது இலங்கை சிங்க படையணி, 11 வது கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிக்கு 30 ஒக்டோபர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் வழங்கல் தளபதி 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கு விஜயம்

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 29 ஒக்டோபர் 2024 அன்று 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தினருக்கு உளவியல் விரிவுரை

இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். பணிப்பகத்தின் படையினருக்கு 30 ஒக்டோபர் 2024 அன்று விரிவுரை நடாத்தப்பட்டது.
முதலாம் படையின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கிளிநொச்சி முதலாம் படையின் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 16 ஒக்டோபர் 2024 அன்று 6 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தினால் இளவாலையில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் இளவாலையில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று கையளிக்கப்பட்டது. யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வீட்டின் சாவியை கையளித்தார்.
212 வது காலாட் பிரிகேடினால் பாடசாலை மாணவர்களுக்கு மூக்குகண்ணாடி வழங்கல்

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்எம் சி ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி 212 வது காலாட் பிரிகேட் தலைமையகப் பகுதியில் மூன்று பார்வை குறைபாடுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கொமாண்டோ படையினரால் சிறிய உலக முடிவிலிருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு

ஊவா மாகாண பிரதி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கொமாண்டோ படையணி படையினர், சிறிய உலக முடிவு (புஞ்சி லோகந்த) பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞனின் சடலத்தை 16 ஒக்டோபர் 2024 அன்று மத்திய பாதுகாப்பு படைத்தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 112 வது பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் மீட்டுள்ளனர்.