இராணுவ சிறப்பம்சம்

Clear

இலங்கை கவச வாகன படையணியினால் வெளிச்செல்லும் படைத்தளபதிக்கு பிரியாவிடை

2024-08-26

இலங்கை கவச வாகன படையணியின் 14 வது படைத்தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களுக்கு 23 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.


மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி - 100 நிறைவு

2024-08-26

சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி பாடநெறி – 100 (2024/ II) 07 மே 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 22 அன்று மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் 48 சிப்பாய்களின் பங்களிப்புடன் நிறைவடைந்தது.


4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி வெற்றி

2024-08-26

2024 ஆகஸ்ட் 19 முதல் 24 வரை வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற 4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி பங்கேற்று, நீளம் பாய்தல் போட்டியில் 5.24 மீட்டர் சாதனையுடன் வெற்றி பெற்றார்.


18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் சிரமதான பணி

2024-08-26

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் 2024 ஆகஸ்ட் 22 அன்று கும்புக்கன கங்காராம விகாரை மற்றும் மொனராகலை மாதுருகெட்டிய சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியினால் மைதான வசதிகளுக்கு அடிக்கல் நாட்டல்

2024-08-25

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்களினால் 19 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் உள்ள "ரெண்டெஸ்வஸ் மைதானத்தில்" புதிய அரங்குக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.


A9 கலாசார சங்கமத்தில் தர்மராஜா கல்லூரி மற்றும் இந்துக் கல்லூரி சங்கமம்

2024-08-25

"A-9 கலாசார சங்கமம் மற்றும் விளையாட்டு" நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 23 ஆகஸ்ட் 2024 அன்று, கண்டி தர்மராஜா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பங்குபற்றலில் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்றது.


மித்ர சக்தி பயிற்சியின் போது படையினர் நட்பு கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றல்

2024-08-23

நடைப்பெறும் மித்ர சக்தி கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் நோக்கில் 21 ஆகஸ்ட் 2024 அன்று மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இந்தியா மற்றும் இலங்கை படையினர்கள் நட்பு கிரிக்கெட் போட்டியில் ஈடுபட்டனர்.


இந்திய படையினர் கவுடுல்ல தேசிய பூங்கா மற்றும் காயங்கர்னி கடற்கரைக்கு விஜயம்

2024-08-21

மித்ரா சக்தி இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுள்ள இந்தியப் படையினர் அண்மையில் கவுடுல்ல தேசியப் பூங்கா மற்றும் காயங்கர்னி கடற்கரைக்கு விஜயம் செய்தனர்.


மித்ர சக்தி இராணுவ கூட்டு செயற்பாடுகள் மூலம் வலுவான உறவுகளை மேம்படுத்தல்

2024-08-19

மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்கும் படையினரிடையே ஒத்துழைப்பு, தோழமை உணர்வை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா வீரர்களின் கலப்பு இரு அணிகளின் பங்குபற்றுதலுடன் நட்புறவு கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டது.


12 வது காலாட் படைப்பிரிவினால் ஹம்பந்தோட்டை மற்றும் மொனராகலை பகுதி தரம் 5 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வினாவிடைத்தாள் வழங்கல்

2024-08-17

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 12 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேக்கும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு தரம் 5 புலமைப்பரிசில் மாதிரி தாள்களை வழங்கினர்.