இராணுவ சிறப்பம்சம்

Clear

இலங்கை மற்றும் இந்திய படையினர் இணைந்து 78வது சுதந்திர தினத்தை கொண்டாடல்

2024-08-16

இலங்கை மற்றும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான கூட்டு வருடாந்த ‘மித்ரசக்தி’ பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ள இந்தியப் படையினர், இலங்கையின் மாதுருஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் 78வது இந்திய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடினர்.


இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி ஆய்வு விஜயம்

2024-08-14

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ அவர்கள் தலைமையக வழங்கல் கட்டளைக்கு 2024 ஆகஸ்ட் 09 அன்று ஆய்வு விஜயம் மேற்கொண்டார்.


"மித்ர சக்தி" கூட்டுக் களப் பயிற்சி ஆரம்பம்

2024-08-14

இந்திய-இலங்கை கூட்டுக் கள இராணுவ பயிற்சியான ‘மித்ரசக்தி’ 2024 ஆகஸ்ட் 24 அன்று மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் ஆரம்ப அணிவகுப்புடன் ஆரம்பமானது.


'மித்ரசக்தி' கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவ படையினர் இலங்கை வருகை

2024-08-14

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக, வருடாந்த கூட்டு இராணுவ பயிற்சியான மித்ரசக்தி போர் பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25 வரை மாதுருஓயாவில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்ற இந்திய இராணுவ வீரர்கள் 2024 ஆகஸ்ட் 12 மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். வந்தடைந்த இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர்.


5 வது கெமுனு ஹேவா படையணியினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

2024-08-13

திரு. இ.எம் ஹேமந்த குமார அவர்களின் அனுசரணையில் வெல்லவாய பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றுக்கு 5 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு 04 ஆகஸ்ட் 2024 அன்று சுருக்கமான நிகழ்வின் போது பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.


யாழ். தளபதியினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் விரிவுரை

2024-08-12

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 09 ஆகஸ்ட் 2024 அன்று தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மாணவ அதிகாரிகளுக்கு விரிவுரையை வழங்கினார். தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் "இராணுவ மோதல்களில் புதிய உலக ஒழுங்கின் தாக்கம் மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கான அதன் தாக்கங்கள்" என்ற தலைப்பில் விரிவுரை யாழ் தளபதியினால் நிகழ்த்தப்பட்டது.


பூநகரின் புனித மேரி தேவாலயத்தின் புதிய அல்தார் ஆடைகள் வழங்கல்

2024-08-12

552 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சிடி வெலகெதர யூஎஸ்பீ ஐஜீ மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் ஒருங்கிணைப்புடன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூநகரின் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சிறுவர்களுக்கு ஆறு புதிய அல்தார் சிறுவர் ஆடைகள் விநியோகிக்கப்பட்டன.


கெமுனு ஹேவா படையணி காற்பந்து வீரர்கள் படையணிகளுக்கிடையிலான காற்பந்து போட்டி 2024ல் வெற்றி

2024-08-11

படையணிகளுக்கிடையிலான காற்பந்து போட்டி 2024ல் 10 ஜூலை 2024 அன்று பத்தேகன காற்பந்து மைதானத்தில் நிறைவடைந்தது.


24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி சிப்பாய்களுக்கான புதிய தங்குமிட வசதியை திறந்து வைப்பு

2024-08-11

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 22 ஆகஸ்ட் 2024 அன்று 241 வது காலாட் பிரிகேட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிப்பாய்களுக்கான விடுதியை திறந்து வைத்தார்.


இலங்கை இராணுவத்தினரால் வாகன பராமரிப்பு மேம்படுத்தல்

2024-08-10

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 2020ல் வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு கடந்த நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இலங்கை இராணுவத்தின் 70 வீதமான வாகனங்கள் தற்போது 15 வருடங்களை கடந்துள்ளன. இதற்குப் பதிலாக மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தினரால், தற்போதுள்ள வாகனங்களை சீரமைக்கும் செயல்முறையின் மூலம் மேம்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.