இராணுவ சிறப்பம்சம்

Clear

541 வது காலாட் பிரிகேட் படையினரால் புத்தகங்கள் வழங்கல்

2024-09-17

541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசி பெர்னாண்டோ ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் மன்/கல்லியடி அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கல் மற்றும் மதிய உணவு விருந்து வழங்கல் என்பன 2024 செப்டம்பர் 09 அன்று இடம்பெற்றது. 541 காலாட் பிரிகேடின் 14வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


உயர் வான் தாக்குதல் பாடநெறி எண் 02 வெற்றிகரமாக நிறைவு

2024-09-17

12 வது இலங்கை சிங்கப் படையணியினால் நடாத்தப்பட்ட உயர் வான் தாக்குதல் பாடநெறி எண் 02 இன் நிறைவு விழா 2024 செப்டெம்பர் 15 ஆம் திகதி நிக்கவெவ வான் தாக்குதல் பாடநெறி பாசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.


விளையாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

2024-09-08

பிரிகேடியர் எல்கேடீ பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் விளையாட்டு பணிப்பகத்தின் 16வது பணிப்பாளராக 02 செப்டெம்பர் 2024 அன்று பனாகொட விளையாட்டு பணிப்பகத்தில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.


பரிஸ் பரா ஒலிம்பிக் போட்டியில் சமித்த துலான் கொடித்துவக்கு உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம்

2024-09-04

2024 செப்டெம்பர் 2ம் திகதி ஆண்களுக்கான எப்44 ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்கள் புதிய உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.


23 வது காலாட் படைப்பிரிவில் விரிவுரைத் தொடர்

2024-09-04

23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைப்பிரிவில் 28 ஆகஸ்ட் 2024 அன்று விரிவுரைத் தொடர் நடாத்தப்பட்டது.


வன்னி தளபதியால் குறிபார்த்து சுடல் 2024 சாம்பியன்களுக்கு விஷேட படையணி தலைமையகத்தில் பாராட்டு

2024-09-04

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இராணுவ விஷேட படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் குறிபார்த்து சுடல் போட்டியில் திறந்த மற்றும் புதியவர்கள் பிரிவில் சாம்பியன்ஷிப்பை வென்ற விஷேட படையணியின் வீரர்களை விஷேட படையணி தலைமையகத்தில் பாராட்டினார்.


51 வது காலாட் படைப்பிரிவினால் கிராம மக்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2024-08-27

51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியுபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 26 ஆகஸ்ட் 2024 அன்று 51 காலாட் படைபிரிவின் சிமிக் பூங்காவில் செல்வபுரம் மற்றும் யோகபுரம் கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 17வது ஆண்டு நிறைவு

2024-08-27

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இடிஎஸ்கே தெனியாய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 15 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தனது 17வது ஆண்டு நிறைவை மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.


22 வது காலாட் படைப்பிரிவில் புதுப்பிக்கப்பட்ட அதிகாரிகள் தங்குமிடம் திறப்பு

2024-08-26

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது, 22 காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


மித்ர சக்தி போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய படையினர் நாடு திரும்பல்

2024-08-26

இந்திய-இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இராணுவப் கூட்டு பயிற்சியான மித்ர சக்தி' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியப் படையினர் 25 ஆகஸ்ட் 2024 இலங்கையில் இருந்து நாடு திரும்பினர்.