இராணுவ சிறப்பம்சம்
75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இராணுவத்தினால் குறைவருமான குடும்பங்களின் வீடுகள் புனரமைப்பு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2 வது பொறியியல் சேவைகள் படையணி படையினர், அனுராதபுரம், திஸாவெவ மேற்கில் உள்ள தேவையுடைய குடும்பம் ஒன்றின் வீட்டை புனரமைத்துள்ளனர். 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற வீடு வழங்கும் நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த புனரமைப்பு திட்டம் வன்னி வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஏ பீரிஸ் பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2 வது பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.எம்.எஸ்.ஜே பண்டார அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
241 வது காலாட் பிரிகேடினரால் கிராமப்புற வீதிகள் சீரமைப்பு

241 வது காலாட் பிரிகேட் தளபதி எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 241 வது காலாட் பிரிகேட் படையினரால் கிராமப்புற வீதிகள் புனரமைப்பு திட்டம் 06 ஒக்டோபர் 2024 அன்று முன்னெடுக்கப்பட்டது.
விருகெகுலு பாலர் பாடசாலையில் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு “பிள்ளைகளை பாதுகாப்போம் – சமமாக நடத்துவோம்” எனும் தொனிப்பொருளில் பனாகொடை விருகெகுலு பாலர் பாடசாலையின் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வு 2024 ஒக்டோபர் 1ம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரி திருமதி சுரங்கி அமரபால மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.
61 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 11 ஒக்டோபர் 2024 அன்று பூஸ்ஸவில் உள்ள 61 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
23 காலாட் படைப்பிரிவினால் மரம் நடுகை திட்டம்

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 23 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2024 ஒக்டோபர் 09 ம் திகதியன்று 23 வது காலாட் படைபிரிவு தலைமையக வளாகத்தில் மரம் நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
18 வது விஜயபாகு காலாட் படையணியினரின் ஏற்பாட்டில் நன்கொடை திட்டம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், 2024 ஒக்டோபர் 01 பாண்டிரிப்பு விஷன் ஹோப் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இயந்திரவியல் காலாட் படையணி படைத்தளபதி இயந்திரவியல் காலாட் பயிற்சி மையம் மற்றும் 2 வது இயந்திரவியல் காலாட் படையணிக்கு விஜயம்

இயந்திரவியல் காலாட் படையணி படைத்தளபதி இயந்திரவியல் காலாட் பயிற்சி மையம் மற்றும் 2 வது இயந்திரவியல் காலாட் படையணிக்கு விஜயம்
சாவகச்சேரியில் இராணுவத்தினால் நிர்மாணித்த வீட்டை 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பயனாளியிடம் ஒப்படைப்பு

யாழ். பாதுகாப்புப் படையினரின் தற்போதைய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சாவகச்சேரி, நுணாவில் மேற்குப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை, 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி பயனாளியிடம் ஒப்படைத்தார்.
தர்மபால வித்தியாலத்தின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் பொறியியல் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் 11 அக்டோபர் 2024 இல் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் வெளிச்செல்லும் படைத் தளபதிக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, 2024 ஒக்டோபர் 03 ஆம் திகதி இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் வெளிச்செல்லும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.சீ பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கியது.