2 வது இயந்திரவியல் காலாட் படையணியினால் வவுனியாவில் தகுதியான குடும்பத்திற்கு வீடு
6th October 2024
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2 வது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் 2024 செப்டம்பர் 27 அன்று வவுனியா, பூரவசம்குளம், நீலியமோட்டையில் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே. வணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் தகுதியான குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியில் இடம்பெற்ற கொடி ஆசீர்வாத நிகழ்வின் போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவி திருமதி எம்.சதானந்தன் குமாரி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிக்கு வீட்டின் சாவியை நேரடியாக வழங்கி வைத்தார்.