12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு
9th October 2024
12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி சித்தாண்டி எரளக்குளத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்றை நிர்மாணித்தனர்.
இத்திட்டம் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்வீபீ ஹேரத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இந்த வீடு 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீ காரியவசம் அவர்களினால் பயனாளிக்கு கையளிக்கப்ட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் பங்குபற்றினர்.