இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்பு
9th October 2024
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ஒக்டோபர் 8 ஆம் திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், மகாசங்கத்தினர் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அவர் இலங்கை இலேசாயுத காலாட் படையணி போர் வீரர்களின் நினைவுத்தூபியில் உயிர்நீத்த போர்வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
அனைத்து நிலையினருக்கும் உட்சாகமூட்டும் வகையில் அவர் உரையாற்றினார். படையணிக்கான தனது எதிர்கால திட்டங்களை முன்வைத்த்துடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான தங்கள் பெருமைமிக்க சேவையினை தொடர தனது கருத்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.