இராணுவ சிறப்பம்சம்

Clear

56 வது காலாட் படையணியினரால் பெரும் போக நெல் பயிர்செய்கை

2024-11-12

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எம்பீஎன்ஏ முத்துமாலை யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பெரும் போகத்திற்கான நெற் செய்கை 08 நவம்பர் 2024 அன்று ஒரு சுப நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.


பயிற்சி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

2024-11-07

விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கே.டி.எம்.எல். சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 05 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற மத நிகழ்வுகளுக்கு மத்தியில் இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.


குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் முதலுதவி தொடர்பான விரிவுரை

2024-11-07

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் முதலுதவி தொடர்பான விரிவுரை 05 நவம்பர் 2024 அன்று நடாத்தப்பட்டது. இவ்விரிவுரையை தியத்தலாவ இராணுவத் தள வைத்தியசாலையின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி மேஜர் ஜேஏவீடபிள்யூ ஜயதுங்க அவர்கள் தனது குழுவினருடன் இணைந்து நடத்தினார்.


குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம்

2024-11-06

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் பாடசலை மற்றும் சுற்றியுள்ள சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை நோக்கமாக கொண்டு வெற்றிகரமாக நீர் சுத்திகரிக்கும் இயந்திர மட்/கல் குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில் நிறுவப்பட்டது.


யக்கல ரணவிரு ஆடைத் தொழிற்சாலைக்கு வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 இன் கல்விச் சுற்றுலா

2024-11-05

வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 இன் இருபத்தைந்து மாணவர் அதிகாரிகள், 30 ஒக்டோபர் 2024 அன்று, வழங்கல் செயல்பாடுகள் தொடர்பான நடைமுறை புரிதலை மேம்படுத்துவதற்காக, யக்கல ரணவிரு எப்பரல் ஆடைத் தொழிற்சாலைக்கு தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக விஜயம் மேற்கொண்டனர்.


பொறியியல் சேவைகள் மத்திய பணிமனையின் 27 வது ஆண்டு நிறைவு

2024-11-05

பொறியியல் சேவைகள் மத்திய பணிமனை தனது 27வது ஆண்டு நிறைவு நிகழ்வை 30 ஒக்டோபர் 2024 அன்று ஹபரகட பொறியியல் சேவைகள் மத்திய பணிமனையின் தளபதி கேணல் என் வணிகசிங்க எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.


56 வது காலாட் படைப்பிரிவு தளபதி 561 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம்

2024-11-04

56 வது காலாட் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் எம்.பீ.என்.ஏ முத்துமாலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், 561 வது காலாட் பிரிகேட், 16 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றிற்கு 24 நவம்பர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.


கற்பித்தல் முறைமை பாடநெறி போர் பயிற்சி பாடசாலையில் நிறைவு

2024-11-04

189 சிப்பாய்களின் பங்கேற்புடன் அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற ‘கற்பித்தல் முறைமை பாடநெறி எண்-76’ 20 ஒக்டோபர் 2024 அன்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.


7 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் மின்னேரியாவில் ஒரு சிப்பாய்க்கு புதிய வீடு

2024-11-04

7 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், 23 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 7 வது இலங்கை பீரங்கி படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு மஹரத்மலே-மின்னேரியாவில் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.


8 வது இலங்கை சிங்க படையணியின் 32வது ஆண்டு நிறைவு

2024-11-04

8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்கேஎல்பீகே சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஒக்டோபர் 16 அன்று படையலகு வளாகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் தனது 32 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.