இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் வெளிச்செல்லும் படைத் தளபதிக்கு பிரியாவிடை

11th October 2024

இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, 2024 ஒக்டோபர் 03 ஆம் திகதி இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் வெளிச்செல்லும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.சீ பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கியது.

வருகை தந்த வெளிச்செல்லும் தளபதிக்கு இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், அவர் தனது பதவியை ஒப்படைக்கும் வகையில் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

மாலையில், வெளிச்செல்லும் படைத் தளபதி மற்றும் திருமதி வைத்தியர் நில்மினி பெர்னாண்டோ ஆகியோரை கௌரவிக்கும் வகையில், அதிகாரிகள் உணவகத்தில் இரவு உணவு விருந்து வழங்கப்பட்டது. படையணியின் புதிய படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், இலங்கை இராணுவ மருத்துவப் படையணிக்கு சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்கினார்.