23 காலாட் படைப்பிரிவினால் மரம் நடுகை திட்டம்
14th October 2024
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 23 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2024 ஒக்டோபர் 09 ம் திகதியன்று 23 வது காலாட் படைபிரிவு தலைமையக வளாகத்தில் மரம் நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத் திட்டம் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பலா,தேசிக்காய், வில்வம், விளா, புங்கை உட்பட கிட்டத்தட்ட 600 கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.