241 வது காலாட் பிரிகேடினரால் கிராமப்புற வீதிகள் சீரமைப்பு

14th October 2024

241 வது காலாட் பிரிகேட் தளபதி எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 241 வது காலாட் பிரிகேட் படையினரால் கிராமப்புற வீதிகள் புனரமைப்பு திட்டம் 06 ஒக்டோபர் 2024 அன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த முயற்சியானது உள்ளூர் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன் இதன் மூலம் நீத்தவிலிருந்து இலுக்குச்சேனை வரையிலான சுமார் 2 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்பட்டது.