18 வது விஜயபாகு காலாட் படையணியினரின் ஏற்பாட்டில் நன்கொடை திட்டம்

14th October 2024

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், 2024 ஒக்டோபர் 01 பாண்டிரிப்பு விஷன் ஹோப் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டீ.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 18 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.எச்.ஆர் சேனாரத்ன ஆர்டபிள்யூபீ ஆஶ்எஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், பிள்ளைகள் மற்றும் ஊழியர்களுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.