2024-10-03 17:17:23
2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.ஆர்.டி.எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் நிட்டம்புவ விஹார மகாதேவி பாலர் பாடசாலையின் 40 பிள்ளைகளுக்கும், சியம்பலாபே இசுரு சிறுவர் இல்லத்தின் 24 பிள்ளைகளுக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்ததுடன், பொருட்களும் வழங்கப்பட்டன.
2024-10-03 17:12:09
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் 2024 ஒக்டோபர் 02 ஆம் திகதி வவுனியா முதியோர் இல்லத்தின் 100 முதியோர்களுக்கான மதிய உணவு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது.
2024-10-03 15:53:48
12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் சின்னவளையன்கட்டு பிரதெசத்தின் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்காக புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
2024-10-03 15:42:18
2024 ஒக்டோபர் 01ம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, களுத்துறை வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கத்தின் (ஆஸ்திரேலியக் கிளை) அனுசரணையுடன், மேஜர் பி.ஏ.ஜே புஷ்பகுமார ஆர்எஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பில் 12 வது காலாட் படைப்பிரிவினால் ஹெலகம ஆரம்பப் பாடசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது..
2024-10-03 15:36:18
222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்.கே.எஸ் திலகரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 9 வது விஜயபாகு காலாட் படையணி 25 செப்டம்பர் 2024 அன்று ஸ்ரீ சித்தர வேலாயுதம் சுவாமி கோவிலில் சிரமதானப் பணியை மேற்கொண்டது.
2024-10-02 13:30:21
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு...
2024-10-01 15:20:40
இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, 3 வது கொமாண்டோ படையணி உள்ளூர் கல்வியை ஆதரிக்கும் வகையில் வவுனியா, புனேவ வ/களுகுன்னன்மடுவ அரச பாடசாலையை புனரமைக்கும் பணியை மேற்கொண்டது.
2024-09-30 17:53:17
16 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் கரப்பக்குட்டியில் குறைந்த வருமானம் பெறும் தேவையுடைய குடும்பத்திற்கான புதிய வீட்டை 24 செப்டம்பர் 2024 அன்று நிர்மாணித்து முடித்தனர். புதிதாக நிர்மாணித்த வீட்டை 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பயனாளியிடம் கையளித்தார்.
2024-09-30 17:49:38
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், 241 வது காலாட் பிரிகேட் 2024 செப்டெம்பர் 28 அன்று அக்கரைப்பற்று பாலமுனை கடற்கரை பூங்காவில் சிரமதான பணியை மேற்கொண்டது.
2024-09-30 17:47:42
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து பலாலி இராணுவ ஆதார வைத்தியசாலையினால் 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி இரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.