பயிற்சி

கணக்காய்வு அவதானிப்புகளைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வு பட்டறை 22 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஜூன் 26 முதல் 2025 ஜூன் 29 வரை நடாத்தப்பட்டது.


மன ஆரோக்கியம் மற்றும் திருப்திகரமான வாழ்க்கை தொடர்பான விரிவுரையை இலங்கை சிங்கப் படையணி 2025 ஜூலை 03, அன்று இலங்கை சிங்க படையணி வளாகத்தில் நடத்தியது.


இராணுவ உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான இரண்டு நாள் பட்டறை 2025 ஜூலை 02 அன்று மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.


மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் 32 அதிகாரிகளின் பங்கேற்புடன் பெற்ற இளம் அதிகாரிகள் பாடநெறி எண் 70 , 2025 ஜூன் 29 அன்று நிறைவடைந்தது.


விஷேட காலாட் நடவடிக்கை பாடநெறி எண் 77 இன் விடுகை அணிவகுப்பு 2025 ஜூன் 28 அன்று மாதுருஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.


இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் அதன் 21 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பதுரலிய பாலிந்தநுவர பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ‘தூய இலங்கை’ திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஜூன் 23 ம் திகதியன்று நடத்தியது.


பனகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையின் 2025 ஆம் ஆண்டின் முதலாவது பாடத்திட்டத்தின் பட்டமளிப்பு விழா 2025 ஜூன் 19 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.


இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.டி.பீ. சிறிவர்தன அவர்களின் கருத்தின் கீழ் 2025 ஜூன் 18 ஆம் திகதி "இராணுவ உறுப்பினராக நடந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்த அமர்வை தொழில்முறை ஆலோசகர் லெப்டினன் கேணல் கே.ஏ. முத்தலிப் (ஓய்வு) நடாத்தினார்.


குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை நடாத்திய, படையலகு பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.51 யை 2025 ஜூன் 18 ஆம் திகதி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் லெப்டினன் கேணல் டி.பி. ராஜசிங்க நினைவு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.


அனுராதபுரம் 21 வது காலாட் படைப்பிரிவு நீச்சல் தடாகத்தில் அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 24 வெற்றிகரமாக நிறைவடைந்தது.