மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 88 நிறைவு

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 29 அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி - 88 (2025/I) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 29 அன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எம்டபிள்யூஎஸ் மில்லகல ஆர்டபீள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மூன்று மாத கால பாடநெறியானது 26 மாணவர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இப் பாடநெறியில் கஜபா படையணியின் கெப்டன் ஓஜிடியூ அதுகோரல அவர்கள் முதலிடத்தைப் பெற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.