16th January 2025
வன்னி பாதுகாப்பு படை தலைமையக சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்துடன் இணைந்து, 2025 ஜனவரி 15 ஆம் திகதி தலைமையக கேட்போர் கூடத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பான கல்வி செயலமர்வினை நடத்தியது.
ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலைய பிள்ளைகள் மற்றும் பெண்கள், துறை அதிகாரி சார்ஜன் சிரியாணி சந்திரலதா இந்த செயலமர்வை நடத்தினார். பெண்களுக்கு எதிரான பணியிட வன்முறையைத் தடுத்தல், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தை நீக்குதல் போன்ற முக்கியமான தலைப்புகளில் அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வு மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலிலும் பிரிகேடியர் கேஎம்வீ கொடித்துவக்கு அவர்களின் மேற்பார்வையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.