அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண். 23 நிறைவு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 23 வெற்றிகரமாக நிறைவடைந்தது.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

4 வது இலங்கை சமிக்ஞை படையணியின் பயிற்சி சிப்பாய் பி.எஸ். சந்திரசிறி பாடநெறியின் சிறந்த மாணவராக விருது பெற்றார்.