30th March 2025
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில், ஐக்கிய நாடுகள் பணிக்கான தையல்காரர்கள் மற்றும் வான்வழி மருத்துவ குழுவிற்கான முன் பயிற்சி பாடநெறி 2025 மார்ச் 27, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்தப் பாடநெறி 2025 மார்ச் 10, அன்று 17 அதிகாரிகளின் (07 இலங்கை கடற்படை அதிகாரிகள், 04 இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் 06 இலங்கை விமானப்படை அதிகாரவனையற்ற அதிகாரிகளின்) பங்கேற்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறை மற்றும் தத்துவார்த்த அம்சங்கள் மற்றும் ஆணைப்படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புப் பணிகள் குறித்த அடிப்படை அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் பாடத்திட்டம், ஐ.நா. அமைதிகாத்தல் அறிமுகம், சூழ்நிலை பயிற்சி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள், களப் பயிற்சி போன்ற பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.எல்.ஏ. டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ்சீ நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் நிறைவு உரையை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர்கள் பங்குபற்றினர்.