11th April 2025
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விரிவுரை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி 21 வது காலாட் படைப்பிரிவு கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.
“ஆபத்தான போதைப்பொருள் தடுப்பு மற்றும் அவற்றின் பொருளாதார மற்றும் சமூக தாக்கம்” என்ற தலைப்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடமத்திய மாகாண ஒருங்கிணைப்பாளர் திருமதி எச்.எம். சாந்தனி தாமரா செனவிரத்ன அவர்களால் விரிவுரை நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் 20 அதிகாரிகள் மற்றும் 70 சிப்பாய்கள் பங்கேற்றனர்.