கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.106 அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நிறைவு

கனிஸ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் - 106 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 10 அன்று அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவத்தின் பல்வேறு படையணிகளை சேர்ந்த 45 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மூன்று மாத கால பாடநெறியைப் பயின்று பயனடைந்தனர். 4 வது கொமாண்டோ படையணியின் சி/558466 லான்ஸ் கோப்ரல் பீடி.ஏ. குமாரசிங்க அவரகளுக்கு பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்வில் தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.