பனாகொடை இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையில் டேக்வாண்டோ பயிற்சி வெற்றிகரமாக 2026 ஜனவரி 08 அன்று நடாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை லிவிங் வெல் டேக்வாண்டோ கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிராண்ட் மாஸ்டர் டெரெக் சம்னர் தலைமையில், இங்கிலாந்து பயிற்றுனர்கள் நடாத்தினர். இது இராணுவ டேக்வாண்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பெறுமதியான தொழில்நுட்ப, தந்திரோபாய மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவத்தை வழங்கியது.