விமானப் படையின் ஆரம்ப பணியமர்த்தல் பாடநெறி எண். 11 – இன் II ஆம் கட்டம் நிறைவு

மினுஸ்கா பணிக்கான தயார்படுத்தலுக்காக நடாத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்கான படையலகு குழு முன்-பணியமர்த்தல் பயிற்சி பாடநெறி எண். 11 – நிலை II, 2025 நவம்பர் 21 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் வை.எம்.எஸ்.சீ.பி. ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்கு முன், நிறைவு உரை நிகழ்த்தினார்.

2025 ஒக்டோபர் 27 முதல் நவம்பர் 21 வரை நடாத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், விமானப்படையின் 3 அதிகாரிகள் மற்றும் 21 சிப்பாய்கள் பயிற்சி பெற்றனர். இந்த பாடநெறி பங்கேற்பாளர்களின் ஐ.நா. செயற்பாடுகள் குறித்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை புரிதலை மேம்படுத்தியது.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.