பாதுகாப்பு தயார்நிலையை வலுப்படுத்த விரைவு பதிலளிப்பு குழு பயிற்சி

பாதுகாப்பு தயார்நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்று கட்ட முயற்சியின் ஆரம்ப கட்டமாக, விரைவு பதிலளிப்பு குழு இரண்டு வார பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 24 ஆம் திகதி பனாலுவையில் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் யு.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் தொடக்க உரையை நிகழ்த்தினார். அவர், வளர்ந்து வரும் செயற்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ச்சியான பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழுள்ள நிறுவனங்களைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் உட்பட 15 உறுப்பினர்களைக் கொண்ட மூன்று விரைவு பதிலளிப்பு குழுக்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன. அதிக கள அனுபவமுள்ள ஆறு தகுதிவாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்ட குழு, பயிற்சி முழுவதும் தத்துவார்த்த புரிதல் மற்றும் அத்தியாவசிய நடைமுறை வெளிப்பாடு இரண்டையும் வழங்க சிறப்பு விரிவுரைகள் மற்றும் நடைமுறை செயல்விளக்கங்களை வழங்கி வருகின்றது.