கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி - 108 நிறைவு

கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 108 இன் விடுகை அணிவகுப்பு 2025 டிசம்பர் 01 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ். டி சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கலந்து கொண்டார்.

பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 51 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இந்த பாடநெறியை வெற்றிகரமாக முடித்தனர்.

2 வது கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எம்.டபிள்யூ.எஸ்.எஸ். செனவிரத்ன பாடநெறியின் சிறந்த மாணவராக அங்கீகரிக்கப்பட்டார். பாடநெறி பங்கேற்பாளர்களால் வழங்கப்பட்ட வர்ண அணிவகுப்பு, பயிற்சியின் போது அவர்கள் பெற்ற தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை வெளிப்படுத்தியது.

இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி, தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.