சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 57 நிறைவு

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 57 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 28 ஒக்டோபர் 2025 அன்று நடைபெற்றது.

இராணுவத்தின் பல்வேறு படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 41 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 23 வது கெமுனு ஹேவா படையணியின் சார்ஜன் ஏ.ஏ. தினேஸ் குமார சிறந்த மாணவராக விருதுபெற்றார்.

பாடநெறியில் கலந்து கொண்டவர்களுக்கு நிறைவுரையை அம்பாறை போர் பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ் சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் வழங்கினார். இந் நிகழ்வில் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.