11th November 2025
இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஒரு நாள் பட்டறையை வழங்கல் கட்டளை தலைமையகம் 2025 நவம்பர் 04 ஆம் திகதி நடாத்தியது.
"தானியங்கி பொருள் முகாமைத்துவ அமைப்பு பதிப்பு 2" , "வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இராணுவ விதிமுறைகளின்படி வீதி விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்" என்ற கருப்பொருளில் இந்தப் பட்டறை நடைபெற்றது.
வழங்கல் கட்டளை தலைமையகத்தின் கீழுள்ள சேவைப் படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகளால் இப்பட்டறை நடாத்தப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பட்டறையில் கலந்து கொண்டனர்.