21st November 2025
படையலகு உதவி ஆயுத பாடநெறி - 89 (2025/II) 2025 நவம்பர் 08, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எம்எல்டிஎஸ் மொல்லிகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மூன்று மாத கால பாடநெறியானது 38 மாணவ அதிகாரிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இப் பாடநெறியில் சிங்க படையணியின் கெப்டன் டிஎன்டி டி சில்வா அவர்கள் முதலிடத்தைப் பெற்றார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.