உற்பத்தித்திறன் மற்றும் செயல்முறை மேம்பாடு பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

உற்பத்தித்திறன் மற்றும் செயல்முறை மேம்பாட்டு பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 நவம்பர் 25 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் தூய இலங்கை திட்டம் மற்றும் இராணுவத் தளபதியின் உத்தரவுகளுக்கு இணங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் தலைமையகத்தில் 5S செயல்திட்டத்தை செயல்படுத்த பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை மேலும் வலுப்படுத்த, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் ஆதரவுடன் உற்பத்தித்திறன் மற்றும் செயல்முறை மேம்பாடு தொடர்பான ஐந்து நாள் பயிற்சித் திட்டம் 2025 ஒக்டோபர் 27 முதல் 31 வரை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 5S கருத்து, பசுமை உற்பத்தித்திறன், மூலோபாய முகாமை, மனிதவள முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தியது.

தலைமையகம் மற்றும் அதனுடன் இணைந்த தொண்டர் படையணிகளைச் சேர்ந்த மொத்தம் 10 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் இப்பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் திரு. எஸ். ஜயக்கொடி மற்றும் சிரேஷ்ட ஆலோசனை உற்பத்தித்திறன் அதிகாரி திரு. சுகத் திசாநாயக்க ஆகியோர் உற்பத்தித்திறன் மேம்பாடு தொடர்பான தகவல் விரிவுரையை நிகழ்த்தினர். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.