இந்திய மற்றும் இலங்கை படையினருக்கு கலாசார பரிமாற்றத்தின் மூலம் உறவுகளை வலுப்படுத்தும் திட்டம்

இந்திய மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான பரஸ்பர கலாசார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய முப்படைகளைச் சேர்ந்த 120 பேர் கொண்ட குழுவினர் 2025 நவம்பர் 26 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. 2025 நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நாள் விஜயம், இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், கலாசார புரிதலை ஆழப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் கேணல் ரங்கராஜன் ராகவன் தலைமையிலான குழுவை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜீசீ.வீ. பெர்னாண்டோ என்டிசீ அவர்கள் வரவேற்றார்.

அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில், மத்திய மாகாணத்தில் உள்ள பல குறிப்பிடத்தக்க இடங்களை பார்வையிடவுள்ளதுடன், இதில் இராணுவ நிறுவனங்கள், கலாசார மற்றும் மத ஸ்தலங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க இயற்கை இடங்கள் பங்கேற்பாளர்களுக்கு இலங்கையின் பாரம்பரியம், மரபுகள் மற்றும் இயற்கை சூழல் பற்றிய பரந்த புரிதலை வழங்குகிறது.

இந்த பரஸ்பர முயற்சியின் ஒரு பகுதியாக, 120 பேர் கொண்ட இலங்கை முப்படைக் குழு ஒன்று இதேபோன்ற இரண்டு நாள் கலாசார சுற்றுப்பயணத்திற்காக இந்தியாவுக்குப் புறப்பட உள்ளது. இதில் ஆக்ரா மற்றும் கயாவில் உள்ள வரலாற்று புனித தலங்களுக்கு வருகை தருவதும் அடங்கும். இது இந்தியாவின் வளமான கலாசார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.