30th November 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் நிலவும் சீரற்ற வானிலை நிலைமையை மதிப்பிடுவதற்காக களத் தளபதிகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்தி, நடந்து வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் தேவையான வழிகாட்டுதல்களை இன்று மாலை இராணுவத் தலைமையகத்தில் வழங்கினார்.