இலங்கையில் மனிதாபிமான பணிக்காக ஐக்கிய அரபு இராச்சிய அனர்த்த மீட்புக் குழுவிற்கு பாராட்டு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிவாரணக் குழுவின் தலைவரான வைத்தியர் ஹமூத் சயீத் ஹரேப் அல் அபரி தலைமையிலான 74 பணியாளர்களைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனர்த்த மீட்புக் குழு, 2025 டிசம்பர் 15, அன்று நீர்கொழும்பு ஹெரிடன்ஸ் ஹோட்டலில் இலங்கைக்கு வழங்கிய சிறந்த மனிதாபிமான சேவைக்காக முறையாகப் பாராட்டப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சிய குழு 2025 டிசம்பர் 01, அன்று இலங்கைக்கு வந்தது, அந்த நேரத்தில் நாட்டில் கடும்மழை, கடுமையான வெள்ளம் மற்றும் தித்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட மண் சரிவுகளால் பரவலான பேரழிவை எதிர்கொண்டது. கிட்டத்தட்ட முழு நாட்டிற்கும் அவசர மனிதாபிமான உதவி தேவைப்பட்டது, குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில்.

மத்திய மாகாணத்தின் கம்பளை, மாவதுர, ரஜதலாவ, அங்கும்புர மற்றும் ரம்புக் - எல ஆகிய இடங்களில் 11 மீட்பு வாகனங்கள், இரண்டு படகுகள், 3,636 உலர் உணவு பொதிகள், 300 கூடாரங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நிவாரணப் பொருட்களைப் பயன்படுத்தி இந்தக் குழு விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும், உள்நாட்டு நிவாரணக் குழுக்களை ஆதரிப்பதிலும், தேசிய அவசரகாலத்தின் போது முக்கியமான உபகரணங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் அவர்களின் முயற்சிகள் முக்கிய பங்கு வகித்தன.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனர்த்த மீட்புக் குழு, அவர்கள் தங்கியிருந்த காலம் முழுவதும், விதிவிலக்கான தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தியது, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும் அனர்த்த தாக்கத்தைத் தணிப்பதற்கும் இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றியது.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, இலங்கைக்கு தேவைப்படும் நேரத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் குழுவினரின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவர்களை கௌரவிக்கும் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. நன்றியும் நட்புறவையும் வெளிப்படுத்தும் அடையாளமாக, இலங்கையில் பணியமர்த்தப்பட்ட காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் குழுவினர் வழங்கிய அளவிட முடியாத சேவைகளுக்கு ஆழ்ந்த பாராட்டைத் தெரிவித்து. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் சார்பில், இலங்கை இராணுவத்தின் உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஒ அவர்கள் அந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராட்டு நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்.