16th December 2025
இலங்கை இராணுவ எல்லே குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவப் படையணிகளுக்கு இடையிலான எல்லே சாம்பியன்ஷிப் - 2025 போட்டி பன்னிரண்டு படையணிகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 2025 டிசம்பர் 12 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
பரபரப்பான ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ சேவை படையணியை தோற்கடித்து இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணி சாம்பியன் பட்டம் வென்றதுடன் இலங்கை கவச வாகன படையணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
பெண்கள் பிரிவில், 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியும் இராணுவ எல்லே குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.