17th December 2025
யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தில் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச்.பீ.ஐ.பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 17 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் எச்.பீ.ஐ.பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ 1991 ஆகஸ்ட் 26 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி – 36ல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1993 ஜுன் 19, இரண்டாம் லெப்டினன் நிலையில் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2024 டிசம்பர் 31 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 டிசம்பர் 27 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தில் வழங்கல் கட்டளை தளபதியாக பதவி வகிக்கின்றார்.
அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 9 வது கஜபா படையணி குழு தளபதி, 9 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, 4 வது கஜபா படையணி செயற்பாடுகள் மற்றும் பயிற்சி கட்டளை அதிகாரி, இராணுவ கல்வியற் கல்லூரி பணிநிலை அதிகாரி 3, இராணுவ கல்வியற் கல்லூரி நிறைவேற்று அதிகாரி, 3 வது இயந்திரவியற் காலாட் படையணி செயற்பாடுகள் மற்றும் பயிற்சி கட்டளை அதிகாரி, 2 வது இயந்திரவியற் காலாட் படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் பிரதி சிரேஷ்ட பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
மேலும் அவர் 1 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, காலாட் பயிற்சி மையத்தின் பயிற்சி பிரிவு கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிளையின் பணிநிலை அதிகாரி 1 (நிறைவேற்று பணிப்பாளர்), இராணுவ தலைமையகத்தின் தலைமையக படையலகு கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக பிரிகேட் தளபதி, 612 வது பிரிகேட் தளபதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலக முழு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தில் வழங்கல் கட்டளை தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு ரண விக்ரம பதக்கம் (இரண்டு முறை) மற்றும் ரண சூர பதக்கம் (இரண்டு முறை) வழங்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட அதிகாரி இளம் அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை குறிபார்த்து சுடல் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி மற்றும் அடிப்படை பரசூட் பாடநெறி ஆகியவற்றை நிறைவு செய்துள்ளார். மேலும் இளம் அதிகாரிகள் காலாட் பாடநெறி - பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளை பாடநெறி – இந்தியா மற்றும் ஓட்டுநர் மற்றும் பராமரிப்பு பயிற்றுனர்கள் இயந்திரவியற் பாடநெறி உள்ளிட்ட வெளிநாட்டு பாடநெறிகளை அவர் பயின்றுள்ளார்.