17th December 2025
2025 டிசமபர் 17 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி எண் – 20 மற்றும் வழங்கல் கட்டளை பாடநெறி – 12 மாணவர்களுக்கு எழுதபொருட்கள் வழங்கலில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி அடையாளமாக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி எண் – 20 ல் ஏழு மாணவர்களுக்கும் வழங்கல் கட்டளை பாடநெறி – 12 ல் ஐந்து மாணவர்களுக்கும் மொத்தம் 12 மாணவர்களுக்கு எழுதுபொருட்களை வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய இராணுவத் தளபதி, மாணவர்களை ஊக்குவித்து, கல்வித் திறன் மற்றும் தொழில்முறை மேம்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இது இலங்கை இராணுவ வரலாற்றில் முதன்முறையாக பாடநெறி பங்கேற்பாளர்களுக்கு எழுதுபொருட்கள் விநியோகிக்கப்பட்ட நிகழ்வாவதுடன் இது அவர்களின் கல்வித் தேவைகளை ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்கும் நோக்கத்தினை கொண்டதாகும்.