23rd December 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தியதலாவ இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து நிலையினருக்குமான விடுமுறை விடுதியை 2025 டிசம்பர் 22, அன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
வருகை தந்த பிரதம விருந்தினரை இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பி.ஜீ.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
சேவையில் உள்ள வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வசதியான தங்குமிட வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த விடுமுறை விடுதி கட்டப்பட்டுள்ளது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.