இராணுவத் தளபதி, மாற்றுத்திறனாளி போர் வீரர்களை சந்தித்து நத்தார் வாழ்த்து தெரிவிப்பு

நத்தார் பண்டிகை மற்றும் நல்லெண்ண உணர்வினை உணர்த்தும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 23 அன்று கம்புருபிட்டிய அபிமன்சல 2 நலவிடுதி, ராகம ரணவிரு சேவன மற்றும் அத்திட்டிய மிகிந்து செத் மெதுர நலவிடுதி ஆகிய இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

கம்புருபிட்டிய அபிமன்சல 2 நலவிடுதிக்கு வருகை தந்த இராணுவத் தளபதிக்கு வாகன தொடரணி மரியாதை மற்றும் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடந்து, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே.வீரகோன் ஆர்டபிள்யூபீ. ஆர்எஸ்பீ மற்றும் அபிமன்சல 2 நலவிடுதியின் தளபதி பிரிகேடியர் ஜீ.ஜீ.ஆர்.மதுகொட யூஎஸ்பீ ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

இப் பண்டிகையை நினைவுகூறும் வகையில் இராணுவத் தளபதி ராகம ரணவிரு சேவன நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார். அவரை ராகம ரணவிரு சேவன நலவிடுதியின் தளபதி பிரிகேடியர் ஜீ.ஆர்.எஸ். தர்மரத்ன யூஎஸ்பீ அவர்கள் வரவேற்றார். இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, இராணுவத் தளபதி அத்திட்டிய மிஹிந்து செத் மெதுர நல விடுதிக்கு விஜயம் செய்தார், அங்கு மிஹிந்து செத் மெதுராவின் தளபதி பிரிகேடியர் பீ.டி.என்.ஐ. அல்மெய்டா ஆர்எஸ்பீ அவர்கள் வரவேற்றார். அதன் பின்னர், நத்தார் செய்தி, புனித பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதங்களை கொழும்பு மறைமாவட்டத்தின் பிரதி ஆயர் வண. கலாநிதி மேக்ஸ்வெல் சில்வா அவர்கள் வழங்கினார்.