2026-05-08

14 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் கே.எம்.வீ. கொடித்துவக்கு அவர்கள் 2026 மே 06 அன்று படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

வருகை தந்த படைப்பிரிவின் புதிய தளபதிக்கு 9 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தத்தமது பொறுப்புப் பகுதிகள் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கப்பட்டது. பின்னர், புதிய தளபதி படைப்பிரிவின் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார்.

அனைத்துத் நிலையினருக்கான தேநீர் விருந்துடன் அன்றைய சம்பிரதாயங்கள் நிறைவடைந்து. இது புதிய தளபதிக்கு அனைத்து நிலையினருடனும் கலந்துரையாட ஒரு வாய்ப்பை வழங்கியது.