11th October 2025
வரவு செலவு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எம்.கே.எஸ்.எஸ். டி சில்வா அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் 19 வது படைத்தளபதியாக 2025 அக்டோபர் 08 அன்று இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுடன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதியை இலங்கை இராணுவ பொது சேவை படையணி நிலைய தளபதி வரவேற்றதுடன் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் படைத்தளபதி வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், போர் வீரர்களின் நினைவுதூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புதிய படைத்தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் இராணுவ மரபுகளின்படி அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. படைத்தளபதியின் படையினருக்கான உரையுடன் அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்துடன் அவ்வுரையில் அனைத்து நிலையினரின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.