2025-04-17 12:07:35
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 2025 ஆம் ஆண்டின் வருடாந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்ரமசிங்க மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜீடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் ராகம ரணவிரு செவன நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
2025-04-17 12:05:26
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கொமாண்டோ படையணி தலைமையத்தில் 2025 மார்ச் 31, அன்று பெண்களுக்கான அதிகாரமளிப்பு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2025-04-17 08:16:47
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் பேரில், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 12 ஆம் திகதி நாவுல கொஹோலன்வெல இராணுவ முகாமில் உள்ள 1 வது விஷேட படையணி கேட்போர் கூடத்தில் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
2025-04-17 08:16:05
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல்...
2025-04-15 13:58:44
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலை கேட்போர் கூடத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியது.
2025-04-15 13:54:33
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் தொடர்ச்சியான மாதாந்த நன்கொடை திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை சமிக்ஞை படையணியின் ஒரு வீரரின் இரட்டை மகள்களுக்கு உதவும் நோக்குடன் 2025 ஏப்ரல் 8 ஆம் திகதி பால் மா பக்கெட்டுகளை நன்கொடையாக வழங்கியது.
2025-04-12 19:47:31
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி நிலந்தி விஜேசூரிய அவர்கள் 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
2025-04-12 14:12:41
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 6 ம் திகதி பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணி விளையாட்டு மைதானத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியது.
2025-04-10 12:59:22
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினர் 2025 மார்ச் 29 அன்று ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்குகளைத் திறந்துள்ளது. இவர்களின் பெற்றோர் இலங்கை இராணுவ சேவைப் படையணியில் பணியாற்றுகிறார்கள்.
2025-04-08 16:03:06
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு ஹப்புத்தளை பிரதேச சுகாதார பிரிவு மற்றும் தியதலாவ பொது மருத்துவமனையுடன் இணைந்து 2025 ஏப்ரல் 05 அன்று, 1 வது கெமுனு ஹேவா படையணியில் "அவளைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் ஒரு சுகாதார முகாமை நடத்தியது. இந்த முயற்சி கெமுனு ஹேவா படையணி படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது.