Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th April 2025 13:54:33 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையரின் மாதாந்த நன்கொடை திட்டம்

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் தொடர்ச்சியான மாதாந்த நன்கொடை திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை சமிக்ஞை படையணியின் ஒரு வீரரின் இரட்டை மகள்களுக்கு உதவும் நோக்குடன் 2025 ஏப்ரல் 8 ஆம் திகதி பால் மா பக்கெட்டுகளை நன்கொடையாக வழங்கியது. ஒரு வருடமும் நான்கு மாதங்களுடை இந்த குழந்தைகள் தங்கள் தாயை இழந்துள்ள நிலையில், அவர்களின் பராமரிப்பு மற்றும் தேவைகளுக்கு தந்தை மட்டுமே பொறுப்பாக உள்ளார்.

அத்துடன், இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் இலங்கை சமிக்ஞை படையணியில் பணியாற்றும் இரண்டு வீரர்களின் பெற்றோருக்கு காற்று மெத்தைகளையும் நன்கொடையாக வழங்கியது.

மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக செயலிழந்த ஒரு சிப்பாயின் தாய்க்கு ஒரு நன்கொடை வழங்கப்பட்டது. மருத்துவ ஆலோசனையின் பேரில், அவருக்கு ஒரு காற்று மெத்தையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டது. இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு அந்த குடும்பத்தின் சிரமங்களை உணர்ந்து, உடனடியாக அதற்கு தேவையான உதவியை வழங்கியது.

இரண்டாவது நன்கொடை, விபத்தினால் படுக்கையில் இருக்கும் இலங்கை சமிக்ஞை படையணி வீரரின் தந்தைக்கு வழங்கப்பட்டது. அவரது வசதி மற்றும் பராமரிப்பை மேம்படுத்த ஒரு காற்று மெத்தை வழங்கப்பட்டது.

மேலும், 10 வது இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 6 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரிகள் பெந்தோட்ட மற்றும் அனுராதபுரத்தில் உள்ள அவர்களின் வீடுகளில் பயனாளிகளை நேரில் சந்தித்தனர்.