Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th April 2025 16:03:06 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரினால் போர் வீரர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு ஹப்புத்தளை பிரதேச சுகாதார பிரிவு மற்றும் தியதலாவ பொது மருத்துவமனையுடன் இணைந்து 2025 ஏப்ரல் 05 அன்று, 1 வது கெமுனு ஹேவா படையணியில் "அவளைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் ஒரு சுகாதார முகாமை நடத்தியது. இந்த முயற்சி கெமுனு ஹேவா படையணி படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி வைத்தியர் (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்த முகாமில் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள், உடற் திணிவு சோதனைகள் மற்றும் இரத்த சக்கரை பரிசோதனை உள்ளிட்ட முக்கிய சுகாதார சேவைகள் வழங்கப்பட்டன. ஹப்புத்தளை பிரதேச சுகாதார பிரிவு மற்றும் தியதலாவ இராணுவத் தள மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும் பெண்களின் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.