கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெலிகந்த பாலர் பாடசாலையின் 60 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய கற்றல் பொருட்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு 2025 ஜனவரி 26 ம் திகதி இடம் பெற்றது.