17th January 2025
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், சிமிக் பூங்கா வளாகத்தில் 2025 ஜனவரி 14 ம் திகதி செல்வபுரம் மற்றும் யோகபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த முயற்சிக்கான நிதி பங்களிப்புகளை மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு), திரு. சிவகுமார் பொன்னத்துரை மற்றும் அவரது துணைவியார் திரு. தபோதரன், திரு. பவான் மற்றும் திரு. தேனுஜன் ஆகியோர் வழங்கினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.