2026-05-23

58 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

58 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு 2026 மே 18 ஆம் திகதி 58 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் ஒரு சம்பிரதாய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.


இராணுவ மரபுகளுக்கு அமைய, வெளிச்செல்லும் படைத் தளபதிக்கு முறைப்படியான இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்வுக்கு மேலும் நினைவுகளைச் சேர்க்கும் விதமாக, பதவி வெளிச்செல்லும் படைத் தளபதி, படைவீரர்களிடையே உரையாற்றிய பின்னர், அனைத்துத் தரப்பினருடனும் குழு படம் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு, அவர் அனைத்துத் நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்துகொண்டு, விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவு செய்தார்.


இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.