30th June 2025
11 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் 54வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.பீ விஜயரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 27 ஆம் திகதி இராணுவ மரபுகளுக்கு இணங்க 54 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த்து.
வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுதூபியல் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், விஜயபாகு காலாட் படையணியின் 8 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் ஒரு குழு படம் எடுத்துக்கொண்டதுடன் படையினருக்கு உரையாற்றியதன் பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்திலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.