இலங்கை இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் எம்.ஆர். ஹமீம் யூஎஸ்பீ அவர்கள் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வில், 11 வது இலங்கை இராணுவ தகவல் தொழில்நுட்ப பணிப்பாளராக 2026 ஜனவரி 02 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்ற புதிய பணிப்பாளர் அனைத்து படையினருக்கும் உரையாற்றினார், ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஒழுக்கம், குழுப்பணி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நவீன இராணுவ நடவடிக்கைகளை ஆதரிப்பதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கையும் அவர் வலியுறுத்தினார், மேலும் அனைத்து நிலையினரும் தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் செயற்பட ஊக்குவிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.