4th January 2026
மேஜர் ஜெனரல் எச்.எம்.ஜி.இ. ஹேரத் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் கிளிநொச்சி 55 வது காலாட் படைப்பிரிவின் 30 வது தளபதியாக 2026 ஜனவரி 02 அன்று கடமை பொறுப்பேற்றார்.
வருகை தநத தளபதியை பிரிகேட் தளபதிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பிறகு, 6 வது இலங்கை சிங்க படையணி படையினரால் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் தலைமையக வளாகத்தில் ஒரு மாங்கன்றை நாட்டியதுடன் படையினருக்கு உரையற்றி அனைத்துப் நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.