இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தனது 5 ஆம் ஆண்டு நிறைவை கரந்தெனிய படையணி தலைமையகத்தில் 2026 ஜனவரி 04 ஆம் திகதி கொண்டாடியது.

ஆண்டு நிறைவை முன்னிட்டு நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல்.சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றியதுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார். அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு, படையலகுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சிறந்த செயற்திறன் காட்டிய அணிக்கு படையணியின் படைத் தளபதி கிண்ணம் வழங்குதல் மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்தன.

இதற்கு இணையாக, தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நீலாங்கனி சமரதிவாகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2026 ஜனவரி 03 ஆம் திகதி ரூ.8,000த்திற்கும் அதிக பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு ஆசிர்வாதம் வேண்டி, 2026 ஜனவரி 02 அன்று இரவு முழுவதும் பிரித் பாராயணம் நிறைவில் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.