56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 563 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளை படையலகுகளுக்கு விஜயம்
1st November 2024
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 563 வது காலாட் பிரிகேட், 3 வது விசேட படையணி பயிற்சி பாடசாலை மற்றும் 7 வது இலங்கை சிங்க படையணி, 11 வது கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிக்கு 30 ஒக்டோபர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.
563 காலாட் பிரிகேட் தலைமையகத்தை வந்தடைந்த படைப்பிரிவின் தளபதியை , 563 காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வைஎம்எஸ்சீபி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் வரவேற்றதை தொடர்ந்து, படையினருக்கு உரையாற்றினார். பின்னர் 7 வது இலங்கை சிங்க படையணி எ நிறுவனம், 3 வது விசேட படையணி பயிற்சி பாடசாலை மற்றும் 1 வது கெமுனு ஹேவா படையணி எ நிறுவனம் மற்றும் பி நிறுவனம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.